புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!!

0
50
A famous country that removed the ban on smoking!! This is a matter of shame for the country!!
A famous country that removed the ban on smoking!! This is a matter of shame for the country!!

புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!!

புகை பிடிக்கும் தடை சட்டத்தை அரசு நீக்கிய விவகாரம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த தடை சட்டத்தினால் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் நீக்கப்பட்டு உள்ளதாக புதிய பிரதமர் கூறியுள்ளார்.

பரபரப்பான இந்த தடை நியூசிலாந்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட தேசிய கட்சி அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் அதற்குப் பின்னால் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார்.

கூட்டணி ஒப்பந்தம் கூட்டணி கட்சிகளுடன் இறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் கூட்டணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 53 வயதான கிறிஸ்டோபர் லக்சன் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் முதல் முன்னுரிமை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கே என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் முந்தைய அரசு புகையிலைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. அதிலும் சிகரெட்டில் குறைந்த அளவு நிக்கோடின், சில்லரை விற்பனை குறைப்பு, இளைஞர்கள் புகைப்பிடிப்பதற்கு வாழ்நாள் தடை போன்றவை அடங்கும். இந்த கட்டுப்பாடுகளை தற்போது முதலில் ரத்து செய்ய லக்சன் தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டுள்ளது.

அவரின் இந்த பேச்சு தற்போது விவாத பொருளாகியுள்ளது. இது பற்றி  ஹெல்த் கோலிஷன் அடோடேரோவா என்ற புகைபிடித்தல் எதிர்ப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு கொள்கை முடிவில் இருந்து பின்வாங்குவது என்பது நாட்டிற்கு அவமானம். இது பொது சுகாதாரத்தில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைவதோடு, மக்களின் உயிரிழப்புகளால் அந்தத் தொழிலின் லாபம் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கை குறித்து லக்சன் கூறுகையில் சிகரெட் மீதான தடை சட்டவிரோதமான விற்பனைக்கான வாய்ப்பை பெறுக செய்யும் என்றும், அதில் பெரும்பாலானவை வரி விதிக்கப்படாமலேயே புழக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இவர் இவ்வாறு கூறி இருக்கையில் நியூசிலாந்து நாட்டில் முந்தைய ஆட்சியின் போது 2008 ஆம் ஆண்டு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை இந்த சட்டம் தடை செய்தது. அதாவது இளம் தலைமுறை புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த ஆட்சியில் இந்த நடவடிக்கையை பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான பல்வேறு அமைப்புகள் பாராட்டின என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.