மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்! 

Photo of author

By Parthipan K

மாண்டஸ் என்ற பெயரில் புதிதாக உருவாகும் புயல்! சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதன்  காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

மேலும் கடந்த வாரம் தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.அதனால் வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும்.காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு பின் புயலாக மாற உள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும்.அதனை தொடர்ந்து தாழ்வு மண்டலமாக இவை வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமை பெற்று மையமாக நிற்கும்.அதனால் மூன்று நாட்களில் புயலாக உருவெடுக்கும்.புதிதாக உருவாகும் புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 8ஆம்  தேதி வரை மழை குறைவாக இருக்கும். ஏனென்றால் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிக்கொண்டு இருக்கின்றது. அதனால் அடுத்த 3 நாட்களுக்கு மழை குறைவாக இருக்கும். மேலும் தென் தமிழ்நாட்டில் மழை குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.