இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

0
253

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்திவுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை இன்று காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். இதனையடுத்து வரும் இருபதாம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை முடிவடைகிறது.இந்த கலந்தாய்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறுமென மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கோ நேரில் யாரும் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.விரைவில் மாணவர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்படுமாறு தெரிவித்தனர்.

Previous articleசென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! திங்கள்கிழமை விசாரணை!
Next articleநாட்டில் நோய் தொற்று பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!