ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி மக்களுக்கு விடுத்த கடும்எச்சரிக்கை:!!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவ்வப்போது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட,பள்ளியில் ஸ்ரீமதியின் உடலை யாரோ தூக்கிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளிவந்தன.இது போன்ற வீடியோக்களை யார் வெளியிடுகின்றன என்பதனை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடி ஒரு வேண்டுகோளினை பிடித்துள்ளது.
சிபிசிஐடி கூறியதவாறு: ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணையை பாதிக்கும் வகையில் எந்த ஒரு வீடியோக்களும் வெளியிட கூடாது என்றும், சிபிசிஐடி புலன்விசாரணைக்கும்,நீதியை நிலை நாட்டுவதற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் தனி நபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனமோ இதுபோன்ற வழக்கு விசாரணையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சிபிசிஐடி எச்சரித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அதனை உடனடியாக சிபிசிஐடி உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.