ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

 

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. இந்த ரசத்தில் சேர்க்கப்படும் தக்காளி மற்றும் மற்றும் மிளகு போன்றவை செரிமான கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் ரசத்தில் வைட்டமின் a,b3,c போன்ற சத்துக்கள் மற்றும் கால்சியம், இரும்பு, மங்கனீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் ரசத்தை நமது உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.மேலும் இது வாயு தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. நோய் தீர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரசத்தை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.