பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!

0
237
#image_title

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் தலையில் காயத்துடன் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று  அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்து, தலையில் காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் பிரேததை கைப்பற்றி யார் குழந்தை என கண்டுபிடிப்பதற்காக டி என் ஏ பரிசோதனை க்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

புதிய கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் சிசிடி கேமரா வைக்கப்படவில்லை இதனால் குற்றவாளியை கண்டு பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். இது யார் குழந்தை, குழந்தை கொலை செய்யப்பட்டதா ? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleவிருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!
Next articleசேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!!