சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!
கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அந்த விசாரணையில் அக்தர் உசேன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (20). சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் அப்துல் அலிமுல்லா சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40). என்பவர் நடத்தி வரும் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தெரியவந்தது.
மேலும் இதனையடுத்து பெங்களூர் போலீஸ் சேலத்திற்கு வந்து அப்துல்லாவை கைது செய்து 10 நாட்களில் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்புகள் அவர்கள் இரண்டு பேருக்கும் மாதம் ரூ.30,000 சம்பளம் சம்பளம் கொடுத்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும் இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் மற்றும் கீயூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரிகள் சேலம் கோட்டை பகுதியில் வசித்து வந்த ஆசிக்(24). என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிபட்டறையில் கூலித்தொழிலாளியாகபணி புரிந்து வருகிறார். மேலும் கைது செய்யப்ப்பட்டவர் ஏ. பள்ளிப்பட்டியை சேர்ந்த ஆஷிக் சேலம் கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடுபத்துடன் வசித்து வந்தார். மேலும் அவரிடம் இருந்து சிடி மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என போலீசார் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.