முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!

Photo of author

By Savitha

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கரூர் பகுதியில் கூலிவேலைக்காக தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கரூரில் வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மோகனூர் வழியாக கொளக்குடி நோக்கி வந்து சென்று கொண்டிருந்த சதிஷ்குமாரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி தொட்டியம் வரை வருகிறேன் எனக்கூறி லிப்ட் கேட்டு ஏறி இவரும் வந்துள்ளனர்.

அப்போது லிப்ட் கேட்டு வந்த நபரிடம் சதிஷ்குமார் மயக்கமாக உள்ளதால் குடிக்க தண்ணீர் வேண்டும் என கூறி வாகனத்தை நிறுத்தி உள்ளதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மயக்கமான சதீஷ்குமாரை அருகில் உள்ள கோவிலில் விட்டுவிட்டு லிப்டு கேட்டு வந்தவர் இருசக்கர வாகனத்துடன் அங்கிருந்து மாயமானார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சதிஷ்குமார் தனது இரு சக்கர வாகனம் மாயமானது குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தபுகாரின் பேரில் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிந்து விசாரணை செய்து வந்தார். அப்போது காட்டுப்புத்தூர் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது சதீஷ்குமாரின் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வந்தவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து காட்டுபுத்தூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.