நடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை!
காந்தம் போல் ஈர்க்கும் கண்கள், ஆளை சுண்டி இழுக்கும் அழகு என்று தனக்கென உரிய திறமையால் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது டி.ஆர்.ராஜகுமாரி மட்டுமே.
சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பச் சுமையை தன் தோளில் போட்டுக் கொண்டு சாதிக்க துடித்தவர். சிறு வயதிலேயே நடனக் கலையில் சிறந்து விளங்கிய ராஜகுமாரிக்கு தனது 16 வயதில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1939 ஆம் ஆண்டு குமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடித்த இவருக்கு மந்திரவாதி, சூரியபுத்திரி உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த போதிலும் படங்களின் தொடர் தோல்வியால் துவண்டு போனார்.
திரை துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் ராஜாயியாக இருந்தவர் பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி என்று தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஒருநாள் தயாரிப்பாளர் சுப்பிரமணியம் அவர்கள் ராஜகுமாரியின் அழகை கண்டு அவரை ‘கச்ச தேவயானி’ என்ற படத்தில் நடிக்க வைத்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் டி.ஆர்.ராஜகுமாரி ரேஞ்ச் எங்கயோ சென்று விட்டது. அடுத்து மனோன்மணி, சிவகவி, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
குறிப்பாக தியாகராஜ பாகவதருடன் ஜோடி போட்டு நடித்த ஹரிதாஸ் படம் 2 வருடங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது என்பதை நினைவு கூற வேண்டும்.
மாபெரும் பொருட்ச்செலவில் உருவான சந்திரலேகா படத்தில் தனது அசத்திய நடனத் திறமையை வெளிப்படுத்தி இந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்பை பெற்றார். புரட்சி தலைவருடன் பெரிய இடத்துப் பெண், பணக்காரி உள்ளிட்ட படங்களிலும், நடிகர் திலகத்துடன் தங்கப்பதுமை என்று பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இயற்கையாகவே கவர்ந்து இழுக்கும் அழகு, அசத்திய நடிப்புத் திறமை உள்ளிட்டவைகளால் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த டி.ஆர்.ராஜகுமாரி தனது திறம்பட செயல்களால் இன்றுவரை நடிகைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
திரைப்பட தயரிப்பாளர், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை, எம்ஜிஆர், சிவாஜியை இணைந்து நடிக்க வைத்தவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று பல சாதனைகளை நிகழ்த்தி தந்திரக்காரியாக தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வந்த டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் சொந்தமாக திரையரங்கு கட்டிய முதல் நடிகை என்ற பெயருக்கு சொந்தகாரி ஆவார்.
சென்னை பாண்டி பஜார் அருகே இவர் கட்டிய டி.ஆர்.ராஜகுமாரி என்ற தியேட்டரில் அந்த காலத்தில் பல வெற்றி படங்கள் திரையிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.