கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

0
225
#image_title

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கடந்த 1957 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் கதை வசத்தினத்தில், ரமணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் “பதுமைப்பித்தன்”.

எம்ஜிஆர் இந்த படத்தில் ஜீவகன் என்ற இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரதாபனாக டி.எஸ்.பாலையா, வேல்விழியாக பி.எஸ்.சரோஜா, அறிவுமணியாக ஜேபி சந்திரபாபு, பராக்கிரமனாக ஈ.ஆர்.சகாதேவன் நடித்திருந்தனர்.

இளவரசர் ஜீவகன் கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் இளவரசரின் தந்தை அதாவது மன்னர் அவர்கள் விலங்கு வேட்டையின் போது இறந்து விட்டார் என்று மன்னரின் தம்பி பிரதாபன் நாட்டு மக்களிடையே தெரிவிக்கிறார்.

மன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி இளவரசர் ஜீவகனுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. உடனே தந்தையின் இறுதி சடங்கிற்கு ஜீவகன் ஓடி வருகிறார். இறுதி சடங்கின் போது ஆண் வேடமிட்ட
மருத்துவர் மகள் வேல்விழி, இளவரசர் ஜீவகனிடம் துண்டு சீட்டை ஒன்றை வழங்குகிறார். அதை பிரித்து படித்த இளவரசர் மகிழ்ச்சியாகிறார். காரணம் அந்த துண்டு சீட்டில் மன்னர் இறக்கவில்லை. மறைக்கப்பட்டு இருக்கிறார் என்று எழுதப்பட்டு இருக்கும்.

அப்பொழுது தான் இளவரசர் ஜீவனுக்கு உண்மை புரிய வருகிறது. மன்னர் பதவிக்கு ஆசைப்பட்டு மன்னரின் சகோதரர் பிரதாபன் தான் இவ்வாறு நாடகம் நடத்துகிறார் என்று. அடுத்து இளவரசனை பைத்தியமாக்க மதுவில் மருந்து கலந்து கொடுக்கிறார். பிரதாபன் சதி திட்டத்தை முன்கூட்டியே அறிந்த ஜீவகன் அதை குடிப்பது போல் நடிக்கிறார். பின்னர் பைத்தியக்காரர் போல் நடிக்க ஆரம்பிக்கிறார். மன்னர் உயிருடன் இருக்கிறார் என்று துப்பு கொடுத்த வேல்விழி, ஜீவகனை காதலிக்கிறார்.

இளவரசர் ஜீவகன் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மன்னரை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக பல வேடங்களை போடுகிறார். இளவரசர் மீது அன்பு கொண்ட நாட்டியக்கார பெண் ஒருவர் அவருக்கு உதவி செய்கிறார். வில்லன் பிரதாபனை தன் அழகாலும், நாட்டியதாலும் மயக்கி மன்னர் இருக்கும் இடத்தை அறிகிறார். இதை இளவரசர் ஜீவகனுக்கு தெரியப்படுத்தி அவரும் இடத்திற்கு மாறு வேடமிட்டுவருகிறாரா. பிரதாபன் ஆட்களுடன் வாள் சண்டையிடும் ஜீவகன், மன்னரை மீட்கிறார்.

பின்னர் ஜீவகன் பைத்தியக்காரர் போல் நாடகமாடியதை கண்டுபிடித்த பிரதாபன், ஜீவகனுக்கு உதவியது நாட்டியக்கார பெண் தான் என்பதை அறிந்து அவரை வில்லால் கொலை செய்து விடுகிறார். இறுதியில் தனது சித்தப்பா பிரதாபனை இறுதியில் பழி வாங்கிக்கிறார் ஜீவகன். இது தான் புதுமைப்பித்தன் கதை.

படத்தில் அனைத்து வேடங்களிலும் அசத்திய எம்ஜிஆர் அவர்கள் வாள் சண்டையில் ஆச்சர்யப்படுத்தி இருப்பார். படத்தில் ட்விஸ்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் அவை விறுவிறுப்பான காட்சிகளாக அமையவில்லை. அடுத்து இந்த காட்சி தான் இடம் பெறும் என்று சொல்லும் அளவிற்கு கதை அம்சம் இருந்ததால் படத்தின் மீதான சுவாரசியம் சற்று குறைவாகத் தான் இருந்த போதிலும் எம்ஜிஆரின் நடிப்பால் ‘புதுமைப்பித்தன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.