அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!

0
126

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!

நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய் அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு மறைமுகமாக செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்தாண்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சென்னையில் நேரில் அழைத்து வந்து பரிசுகளை வழங்கி நடிகர் விஜய் கௌரவித்தார். இது அரசியல் செயல்பாடு தான் என்று ஒருபுறம் விமர்சிக்கப்பட்டாலும் பலராலும் பாராட்டப்பட்டது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அவர்களையும் நடிகர் விஜய் அவர்கள், சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அத்துடன் நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலைகளையும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களையும் ரகசியமாக செயல்படுத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியாகும் படங்கள் அனைத்திலும் அரசியல் படமாக உருவாக்கப்பட்டன. அந்தப் படங்களில் விஜய் அவர்கள் பேசும் அரசியல் வசனங்கள், சில அரசியல் கட்சியினரை அச்சுறுத்தும் விதமாக அமைந்தன.

இந்நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது

Previous articleகுடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!
Next articleவிரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்!!