அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!

0
207
A private rescue of a baby girl who was kidnapped in a government hospital!
A private rescue of a baby girl who was kidnapped in a government hospital!

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் யூனிஸ் வயது 28. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் யூனியன் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இதனையடுத்து 29 ஆம் தேதிbதிவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து திவ்யபாரதி தனது குழந்தையுடன் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தனர் உதவிக்காக அவரது கணவரும் உடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு திவ்யபாரதி மற்றும் அவரது கணவன் சாப்பிட்டுவிட்டு குழந்தையின் அருகே தூங்கினார். நேற்று அதிகாலை திவ்யபாரதி எழுந்து குழந்தை படுத்திருந்த தொட்டிலை பார்த்தார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவரை எழுப்பி தகவல் தெரிவித்தார். இதனையடுத்து இரண்டு பேர் தனது குழந்தையை தேடி அலைந்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்கவில்லை. மேலும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர் இதன் பேரில் திரண்டு வந்த அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். இந்நிலையில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தூங்கிய நேரத்தில் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறினர். குழந்தை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதார். பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்திச் சென்றதால் அங்கிருந்தவர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு விட்டு உடனடியாக ஆறு தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். இதற்கிடையே குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் ஆட்டோவில் தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் அந்த பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை கேரளாவில் மீட்கப்பட்டது. 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார் பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை  ஆய்வு செய்வதற்கு  11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. 
Next articleசுவர் போல நின்ற புஜாரா… அதிரடி காட்டும் பண்ட்… மூன்றாம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா