ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பெரிய சோழமூர் ராம்நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் சரவணன் தறிபட்டரையில்  வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு குடல் இரக்கம் ஏற்பட்டது. இதனால் சரவணன் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி இருந்தார் நிறைய சரவணனுக்கு சரிவர வேலை இல்லாததால் கடனை திருப்பித் தர முடியவில்லை. அதன் காரணமாக மன உளைச்சலில் சரவணன் இருந்து வந்தார் மேலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் மேலும் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் மனைவியிடம் கூறினார்.

மேலும் சரவணன் கூறுவதை கேட்ட அவரது மனைவி கனகசுந்தரி அதிர்ச்சி அடைந்து சரவணன் சமாதானப்படுத்தினார். மேலும் இந்நிலையில் தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார். அவரது மகள் வீட்டிற்கு வந்தபோது தந்தை தூக்கு போட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே இது குறித்து அக்கம் பக்கத்தினர்களும் சென்று தகவல் தெரிவித்தார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சரவணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சரவணனை பரிசோதனை செய்த  மருத்துவர்கள் சரவணன் வரும் வழியில் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து வீரப்பன் சந்திரன் போலீஸ் அதற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.