அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!
அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உண்மைகளை வெளிக்கொண்டு வர விசாரணை குழுவை நியமித்தது.
அதில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் முக்கிய புள்ளியாக எடப்பாடி பெயர் சிக்கி உள்ளது. இந்த கொடநாடு வழக்கு தற்பொழுது மத்திய புலனாய்வுத்துறை கைக்கு மாறியுள்ளது. கடந்த மாதம் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்ய கொடநாடு சென்றனர். அப்பொழுது கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த மரம் வெட்டப்பட்டு புதிய மரத்தை நட்டு வைத்திருந்தனர். இது அனைத்தும் தடைகளை அளிப்பதற்காக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் மத்திய புலனாய்வுத் துறையினருக்கு எழுந்துள்ளது.
கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சயானை விசாரணை செய்ததில், அவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி மீதுதான் அடுக்கடுக்காக பல குற்றங்களை சுமத்தியுள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக எடப்பாடி பெயரானது கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடிபட்ட நிலையில், வழக்கானது அவர் மீது போடப்படுமா என்று பேசப்பட்ட வருகின்றது. கைது செய்யப்பட்ட சாயானை விசாரணை செய்கையில் எடப்பாடி உடன் நெருங்கிய நண்பரான இளங்கோவன் பெயரும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அடுத்தடுத்த பல சந்தேகங்கள் எழுகிறது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கார் ஓட்டுநர் சாலை விபத்தில் உயிரிழந்ததும் சேலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் தான். தற்பொழுது சாயான் கூறுகையில், பெயர் அடிபடுவதும் எடப்பாடி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் இளங்கோவன் என்பவர் தான். இவைகள் அனைத்தும் சேலத்தையே சார்ந்துள்ளதால் அவர்களுக்கு சந்தேகம் எற்பட்டுள்ளது.
அதனால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கும் சேலத்திற்கும் இடையே ஏதோ ஒரு இணைப்பு உள்ளது என்ற முறையில் அடுத்த கட்ட விசாரணையை நடத்த உள்ளனர். இதனை அறிந்த எடப்பாடி, கட்சி நிர்வாகிகளை தவிர்த்து விட்டு இவர்மட்டும் தனியே வழக்கறிஞர்களுடன் இந்த வழக்கு குறித்து தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார் என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கட்டாயம் கொடநாடு கொலை மற்றும் கொலை வழக்கிற்கு எடப்பாடிக்கும் சம்பந்தம் இருக்கும் என்றும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எடப்பாடியை குறை கூறி வருகின்றார்களாம். ஊழல் வழக்கில் சிக்கிய கொங்கு மண்டலம் முன்னாள் அமைச்சர்களுக்கு எடப்பாடி ஏதேனும் உதவி செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது உள்ள நெருக்கடியில் எடப்பாடி உள்ளதால் அதனை கண்டு கொள்ளவில்லை.இதைப்பற்றி முன்னாள் கொங்குமண்டல அமைச்சர்கள் தனது நெருங்கியவர்களிடம் கூறி புலம்புவதாக கூறுகின்றனர். இவ்வாறு முன்னால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் புலம்பியது எடப்பாடி காதிற்கு சென்று விட்டது.
ஒரு பக்கம் உட்கட்சியிலேயே ஒற்றைக் கட்சி தலைமைக்கு போராடிவரும் நிலையிலும், மற்றொரு பக்கம் கொடநாடு வழக்கு மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்று அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி பெயர் சிக்கி உள்ளது. இச்சமயத்தில் முன்னாள் அமைச்சர்களின் புலம்பலை கேட்டு இவர் வேதனை அடைவதாக கூறுகின்றனர்.