பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!

0
121
The case is biased towards the tribals! God's order for everyone in general!
The case is biased towards the tribals! God's order for everyone in general!

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி.இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்  பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது அங்கு பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.கடந்த பத்து வருடகாலமாக பழங்குடி இனத்தவர்கள் கோவிலிற்குள் சென்று வழிபடவிடாமல் உயர்ந்த சமூகத்தை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர்.இந்த செயலானது சட்டவிரோதமானது ஆகையால் தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களின் சமூகத்தை சேர்ந்த மக்கள் கோவிலிற்குள் சென்று வழிபட அனுமதித்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நீதிபதி மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர் திலக்குமார் வாதாடினார்.அப்போது அவர் கடவுள் என்பது அனைவருக்கும் பொதுவானவர் ,கடவுளை வழிப்படுவதில் எந்த ஒரு பாகுபாடும் பார்க்கக்கூடாது என கூறினார்.

மேலும் இது போன்ற சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனால் இந்த வழக்கிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

பழங்குடி இனத்தவர் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலிற்குள் சென்று வழிபடலாம் என்றும் உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.