அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

Photo of author

By Amutha

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

Amutha

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராஜன். இவர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு ராஜன் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

இதை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் பார்த்துள்ளனர். கடும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் இது பற்றி எழும்பூர் காவல் நிலையத்துக்கு தகவலை அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எப்போதும் போல் பணிக்கு வந்து பணியை தொடங்கிய ராஜன் திடீரென மருந்து வழங்கும் இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலைப்பளு காரணமாக செய்து கொண்டாரா?  அல்லது குடும்ப பிரச்சனையா?  என்பது விசாரணையின் அடிப்படையில் தான் தெரியும். வேலைக்கு வந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.