ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும்!! உங்கள் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் உப்பு கறை நிமிடத்தில் மாயமாகும்!!
உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்து கிடக்கும் கறைகளை நீக்க இந்த எளிய வழிகளை அவசியம் பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம்
2)வினிகர்
செய்முறை:-
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பிறகு ஒரு க்ளீனர் கொண்டு தண்ணீர் ஊற்றி பாத்ரூமை தேய்த்து சுத்தம் செய்தால் கறைகள் நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சோடா உப்பு
2)வினிகர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி சோடா உப்பு மற்றும் 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பிறகு ஒரு க்ளீனர் கொண்டு தண்ணீர் ஊற்றி பாத்ரூமை தேய்த்து சுத்தம் செய்தால் கறைகள் நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.
தேவையான பொருட்கள்:-
1)சீகைக்காய் ஷாம்பு
2)லெமன் சாறு
செய்முறை:-
ஒரு கிண்ணம் எடுத்து ஒரு பாக்கெட் சீகைக்காய் ஷாம்பு சேர்த்து ஒரு எலுமிச்சத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.
இதை ஒரு 1/2 லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இந்த நீரை பாத்ரூம் முழுவதும் ஊற்றி சுத்தம் செய்தால் கறைகள் நீங்கி புதிது போன்று பளிச்சிடும்.