உங்கள் கிட்னியில் கல்லா? அதை கரைக்கும் வழிமுறைகள்!

Photo of author

By Amutha

உங்கள் கிட்னியில் கல்லா?அதை கரைக்கும் வழிமுறைகள்!

இயல்பாகவே எல்லா மனிதர்களின் சிறுநீரிலும் கல் வெளியேறும் என்பது தெரியுமா?? அந்தக் கல் மைக்ரான் அளவில் இருக்கும். அது கண்ணுக்குத் தெரியாது என்பதோடு நமக்கு எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. அதுவே அந்த கற்களின் அளவு ஒரு மில்லிமீட்டர் 2 மில்லி மீட்டர் என்று பெரிதாகும் பொழுது நமக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம். அதுவே மிகவும் பெரிதாகி 5 மில்லி மீட்டர் அளவு வளரும் பொழுது நமது சிறுநீர் குழாயை அடைத்துக் கொள்ளும். இதனால் நமது விலா பகுதியில் அதாவது முதுகு பகுதியில் விலா எலும்பில் மிகவும் கடுமையான வலி ஏற்படும்.

வலி தாங்காமல் நடுராத்திரியில் எழுந்து அமர்வோம் நிற்க முடியாது. சரியாக அமர முடியாது. வாந்தி வருவது போல் உணர்வு அல்லது சில சமயங்களில் வாந்தி வரும். சாதாரணமாக சிறுநீர் கழிக்கும் பொழுது ஒருவித கெட்ட வாடை வரும் இதுபோன்ற பலவித அறிகுறிகள் நமது கிட்னியில் கல் சேர்வதால் வரலாம். சில சமயங்களில் கற்களின் அளவு அதிகமானால் நமது சிறுநீரில் ரத்தம் கூட வரலாம் இவையெல்லாம் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.

இந்த பதிவில் கிட்னி கல் என்றால் என்ன அது எவ்வாறு உருவாகிறது அதன் அறிகுறிகள் என்ன அதை எப்படி கரைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
சிறுநீரகம் நமது உடலில் 4 முதல் 5 இன்ச் அளவுள்ள ஒரு சிறிய உள்ளுறுப்பு. நமது உடலில் உள்ள ரத்தத்தை 40 முறை இது சுத்திகரிக்கின்றது. அவ்வாறு சுத்திகரிக்கும் பொழுது வடிகட்டி வருகின்ற கழிவுப்பொருள் தான் நமது சிறுநீர். இந்த சிறுநீரானது சிறுநீர் குழாய் மூலம் சிறுநீர் பையில் சேரும். அங்கிருந்து சிறுநீரானது வெளியேற்றப்படுகிறது. நமது சிறுநீரகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான வடிகட்டிகள் அதாவது நெப்ரான்கள் உள்ளன. இதில் ஒரு லட்சம் நெஃப்ரான்கள் செயல்பட்டால் கூட நமக்கு நார்மல் ஆக தான் சிறுநீர் வெளியேறுதல் நடைபெறும். இவ்வாறு குறைவதால் தான் நமக்கு கிட்னியில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன நாம் ஆரம்பத்தில் சரி செய்யாமல் கடைசி கட்டத்தில் போவதால் தான் டயாலிசிஸ் போன்றவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது.

காய்ச்சல் நமக்கு ஏற்பட்டால் கூட ரத்த பரிசோதனையோடு சிறுநீர் பரிசோதனையும் செய்வர். ரத்த பரிசோதனையில் சீரம், கிரியேட்டின் போன்ற பொருட்களை கவனிப்பார்கள். இந்த யூரியாவையும் கிரியேட்டினியும் சிறுநீரகம் நமது உடலில் சேரவிடாமல் வெளியேற்றி விடும். கிட்னி பழுதடைதல் ஆரம்பிக்கும் பொழுது நமது உடலில் கிரியேட்டின் ,யூரியா அதிகமாகிவிடும். இதனால் புரோட்டீன்கள் அல்புமின்கள் நமது சிறுநீரில் வெளியேறிவிடும். சாதாரண சமயங்களில் அவ்வளவு புரோட்டீன்களும், அல்புமின்கள் வெளியேறாது. ஆனால் புரோட்டீனின் அளவு யூரினில் அதிகமாக பார்த்தால் கிட்னி பிரச்சனை தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
பொதுவாக சிறுநீரகப் பிரச்சனை ரத்த கொதிப்பு அதிகமாகும் பொழுது, சர்க்கரை வியாதியினால், சிறுநீரகத் தொற்று ஏற்படும் பொழுது, சாதாரணமாக புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படலாம். இதனால் நமது சிறுநீரகம் பாதிப்படைந்து செயல் இழக்க தொடங்குகிறது.

சிறுநீரகத்திலிருந்து வடிகட்டி வெளியேறும் கழிவு பொருளில் கற்கள் இருக்கலாம்‌. அதில் உள்ள பெரிய கற்கள் அடைத்துக் கொண்டால் நமக்கு கடுமையான வலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் சிறு சிறு கற்கள் என்றால் தான் அவ்வப்போது வந்து அடைத்துக் கொண்டு நமக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இவை நாளடைவில் நமது சிறுநீரகத்தையும் செயலிழக்க வைக்கும். சிறுநீரக கற்கள் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. 1.குடும்பத்தில் யாருக்கு என்னும் சிறுநீரக கற்கள் இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
2.வெயில் அதிகம், அதிக வியர்வை வெளியேறும் இடத்தில் வேலை செய்து கொண்டு, தண்ணீர் குறைவாக அருந்தினால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
3. உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பது. மேலும் புரோட்டினை அதிகம் எடுத்துக் கொள்வது.
4. எடை அதிகமாக இருத்தல்.
5. சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் அல்லாத
சில கட்டிகள் அவற்றின் அழுத்தத்தால் கற்கள் உருவாகலாம்.
6. எடை இழப்பிற்கு மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது குடலில் அறுவை சிகிச்சை செய்திருக்கலாம். மேலும் ரத்த கொதிப்பிற்கு நாம் சாப்பிடும் மருந்துகளின் விளைவாக கூட சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகலாம். இதில் முக்கியமான இரண்டு காரணங்கள் என்றால் அது இரண்டாவது மற்றும் மூன்றாவது காரணங்களே!

இவ்வாறு கிட்னியில் வரக்கூடிய கல் பெரும்பாலும் கால்சியம் ஆக்சலேட்டாக இருக்கலாம். இதுதான் 80% சதவீதம் மக்களுக்கு வரக்கூடியது. மீதி 20 சதவீதம் கற்கள் யூரிக் ஆசிட் கற்களாகும்.

பொதுவாக கிட்னியில் கற்கள் உருவாகி வலி உண்டானால் வலி நிவாரணி அல்லது மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுப்பர். இந்த மருந்துகள் மூலம் கற்களை வெளியேற்ற செய்வதற்கான முயற்சி செய்வார். இந்த வழி இல்லாமல் லித்தோ டிரிப்ஸி முறை உள்ளது. மேக்ஸிமம் மிகப்பெரிய கற்கள் உண்டாகி சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் என்று வரும்பொழுது மட்டுமே பெரிய அறுவை சிகிச்சைகள் எல்லாம் நடைபெறும்.

இந்த கிட்னியில் கல் வர வராமல் தடுக்க என்ன செய்வது??
1. போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
2. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
3. சோடா, குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
4. உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட அப்பளம், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வகைகளை தவிர்ப்பது நல்லது.
5. ஆக்சலேட் வகை உணவுகளை குறைப்பது நல்லது. எடுத்துக்காட்டாக பீட்ரூட் முள்ளங்கி, கீரை,

எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
ஆக்சலேட்க்கு எதிராக செயல்படக்கூடியசிட்ரிக் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. எலுமிச்சை ,ஆரஞ்சு அன்னாசி. மேலும் யூரிக் ஆசிட் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் செய்யும்.
கேரட், பாகற்காய் வாழைப்பழம், இளநீர், வெள்ளரி, முட்டைகோஸ், போன்ற பொட்டாசியம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கிட்னியில் கல் உருவாகாமல் தடுக்கலாம்.