பக்தி பாடல் பாடி கடவுளை மயங்க வைத்து நிகழ்ந்த வினோத கொள்ளை சம்பவம்!!
கோவிலில் திருடப் போன கொள்ளையன் கடவுள் பாடல் பாடி பத்து ரூபாய் காணிக்கை வைத்துவிட்டு உண்டியலில் இருந்து ரூ.5000ஐ கொள்ளையடித்து சென்றான்.
அரியானா மாநிலத்தில் உள்ள ரிவாரி மாவட்டம் துருஹிரா என்ற பகுதியில் இந்து மத வழிபாட்டுத்தலமான அனுமன் கோவில் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் நேற்று மாலை பக்தர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர் வழிப்பாட்டு தளத்தில் அமர்ந்து பக்தி பாடலை மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்களுக்கு மேல் பாடல் பாடிய அந்த நபர் கடவுள் சிலை முன்பு பத்து ரூபாய் வைத்தார். பின்னர் யாரும் அந்த கோவிலில் இல்லாத சமயத்தில் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய் ஐயாயிரத்தை கொள்ளையடித்துச் சென்றார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இன்று தான் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. கொள்ளை சம்பவம் குறித்து வழிபாட்டு தல நிர்வாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சாமிக்கு காணிக்கை வைத்துவிட்டு உண்டியலை கொள்ளை அடித்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.