மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!

0
143
A sudden fire accident in the hospital!! Rooms that look like a smoke zone!!
A sudden fire accident in the hospital!! Rooms that look like a smoke zone!!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!

ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனை தான் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனை ஆகும்.

இந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மூலமாக தீ பற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை பணியாளர்களும் குழந்தைகளின் பெற்றோர்களும் ஈடுபட்டனர்.

இந்த தீயால் அறை முழுவதும் புகை சூழப்பட்டு, பிறகு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகை வெளியேற வழி செய்தனர். மேலும், இந்த தீ விபத்து மென்மேலும் பரவாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பெற்றோர்கள் அனைவரும் தனது தொலைப்பேசிகளை பயன்படுத்தி அதன் மூலமாக டார்ச் அடித்து குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே கொண்டு சேர்த்தனர்.

நூறு படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தீவிர சிகிச்சைப் பிரிவிலுமே தீயின் காரணமாக புகை சூழப்பட்டது. எனவே, இந்த அறைகளில் இருந்த மொத்தம் 47 குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களும், பெற்றோர்களும் இணைந்து வெறும் ஐந்து நிமிடங்களிலேயே வெளியே கொண்டு சேர்த்தனர்.

மேலும், தீயணைப்பு துறை வீரர்களுக்கு முன்பாகவே மருத்துவமனை வீரர்கள் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர். எனவே, தீ பரவுவதற்குள் அனைத்து குழந்தைகளும் பெற்றோர்கள் மற்றும் பணியாளர்களின் உதவியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

உரிய நேரத்தில் அனைவரும் சரியாக செயல்பட்டது தான் இதற்கு காரணம் என்று மருத்துவமனையின் உள்ளே இருந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!
Next articleகோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!