திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த நில நடுக்கமானது அட்சரேகையாக 73.32 எனவும், தீர்க்கரேகையாக 184 எனவும் பதிவாகி இருக்கிறது. அதேபோல் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் சுமார் 5.2 அலகுகளாக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஏதேனும் சேதம் எற்பட்டிருக்கிறதா, மக்களுக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்து எந்த விளக்கமும் இது வரை தெரியவில்லை.
இதற்கு முன்னதாகத்தான் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு பகுதிகள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேலும், இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் பதிவானது.
எனவே, தற்போது இதை விட அதிகமாக ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்க அலகு பதிவாகி இருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.
ஒருபுறம் வெளுத்து வாங்கும் மழை இன்னொருபுறம் இது போன்ற நிலநடுக்கம் என்று மக்கள் தினம்தோறும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.