கரூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்த ஆசிரியர்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!
கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமம் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் முகமதுபரீத் (46). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39). இவர்களின் மகள் ஜீகினாஜ் (17). இவர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பப் தகராறு ஏற்படும். அந்த தகராறானது போக்குவரத்து நகரில் புதிதாக வாங்கிய வீட்டினால் கடன் ஏற்பட்டதால் இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்படும் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
மேலும் இந்த கடன் பிரச்சினையால் மன வேதனையில் இருந்த முகமது பரீத் பெயர் தெரியாத விஷயத்தை குடித்துவிட்டு அதனை தனது மனைவிக்கும் மகளுக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த முகமது பரீதின் அண்ணன் சாதி பாட்ஷா தனது ஆட்டோவின் மூலம் மூவரையும் வடிவேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி செய்த பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவர்களின் மகள் ஜீகினாஜ் சிகிச்சை பலன்னின்றி உயிரிழந்தார். இதன் உடல் ராயல் கேர் மருத்துவமனையில் உள்ளது. இருவரையும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே முகமது பரீத் இறந்து விட்டார் அவரது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நஸ்ரின் பானு அவசர சிகிச்சை பிரிவில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் இவர்கள் கடன் பிரச்சனையால் தான் தற்கொலை செய்து கொண்டார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.