24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

0
256
#image_title

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை.

திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஆசிரியராக விருது விளங்கினான் பகுதியை சேர்ந்த லட்சுமணன் வயது 51, 5ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்  சாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களிடம் ஆசிரியர் லட்சுமணன் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் புவனேஷ்வரிக்கு புகார் அளித்துள்ளனர்.அதில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் லட்சுமணன் சுமார் 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும்,இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அலுவலர் புவனேஷ்வரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டி.கல்லேரி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடம் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர்.இதன் அடிப்படையில் ஆசிரியர் லட்சுமணன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து ஆசிரியர் லட்சுமணனை அனைத்து மகளிர் காவலர்துறையினர் கைது செய்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தி அவரை கைது செய்தனர்.

மேலும் ஆசிரியர் லட்சுமணன் மீது 10 பிரிவுகள் கீழ் போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர் 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்த சம்பவம் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!
Next articleபள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு!