பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

0
122
#image_title

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியதில் மோதல் தள்ளுமுள்ளு கீழே விழுந்த வர் உயிர் இழப்பு ரம்ஜான் பண்டிகையில் சோகம்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் மசூதி உள்ளது. இங்கு இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டு விட்டு கிளம்பி சென்றனர்.
இதன் பின்னர் ரம்ஜான் பண்டிகை நாட்களில் மசூதியில் பல்வேறு பணிகளை செய்தவர்களுக்கு மசூதி ரம்ஜான் கமிட்டி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது.
அப்போது அஸ்தினாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் வயது 55 என்பவருக்கு 1200 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

முகமது ரியாஸ் பணத்தை பெற்றுக் கொண்டு அங்கு காவலாளியாக வேலை பார்ப்பவரிடம் எவ்வளவு பணம் உனக்கு கொடுத்தார்கள் என கேட்டிருக்கிறார். அப்போது கமிட்டி செயலாளர் பாஷா என்ற அதிக்குர் ரகுமான் அது ஏன் நீ கேட்கிறாய் என வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயக்கம் அடைந்த முகமது ரியாஸை பாஷா உட்பட மசூதி நிர்வாகிகள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் மசூதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மசூதியில் தன்னை தாக்கியதாக தன் தந்தை தெரிவித்ததாக அவரது மகன் பாரூக் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார் மசூதியில் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார ஆய்வு செய்தனர் அதில் உயிரிழந்த முகமது ரியாசிற்க்கும் பாஷாவிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு நடப்பது செருப்பை தூக்கிக்கொண்டு முகமது ரியாஸ் தாக்க முயல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகை நாளன்று மசூதியில் நடைபெற்ற இந்த உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha