மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

0
228
A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?
A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. அதனை உடனடியாக விசாரணை நடத்தினர். அதில்  அடையாளம் தெரிந்தது போலீசார் நடத்திய தொடர் விசாரணையில்  கொலையான வாலிபரின் சொந்த ஊர் எட்டயபுரம் சாலையிலுள்ள சங்கராபேரியை சேர்ந்த மாடசாமி மகன் விக்னேஷ்(வயது28) என தெரிய வந்தது.

தற்போது இவர் தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவில் வசித்து வந்தார். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மதுபழக்கத்திற்கு அடிமையான இவருக்கு பல நண்பர்கள் உண்டாம். அவர்களுடன் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று மது குடிக்கும் பழக்கத்தை இவர் வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார்.

மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று தண்ணீர் பந்தலில் மர்மமான முறையில் மர்மநபர்களால் மதுபாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தவர்கள் யார்?  கொலைக்கான காரணம் என்ன  என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடிவருகிறோம். ஓரிரு நாட்களில் அவர்களை பிடித்து விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Previous articleகுழந்தைகள் பெற்றால் மாதந்தோறும் 60000 ரூபாய் பணம்! அரசு வெளியிட்ட  புதிய திட்டம்
Next article55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!