குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

Photo of author

By Amutha

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் வயது 45. இவர் இரும்பு, பேப்பர் வாங்கும் பழைய பொருட்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது 28. இவர் பழைய பாட்டில்கள், இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார்.

கண்ணன் சில சமயங்களில் மனோகர் வேலை செய்யும் கடையிலும் பழைய பொருட்களை விற்பனை செய்யும்போது கண்ணனுக்கு, மனோகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மனோகரன் கோவிலம்பாக்கத்தில் தனியார் பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே குடிபோதையில் படுத்து இருந்த கண்ணன் மனோகரனிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் ஏற்கனவே பழைய பாட்டில்கள் விற்றதற்கு கண்ணன் காசு தராமல் மனோகரனை ஏமாற்றி வந்துள்ளதால் மீண்டும் குடிக்க பணம் கேட்ட கண்ணனுக்கு தர மறுத்துவிட்டார்.

இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த கண்ணன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மனோகரின் வயிற்றில் சொருகி உள்ளார். மனோகரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் ஓடி வரவும் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிய மனோகரை  மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மனோகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

மருத்துவர்கள் கூறிய புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கண்ணனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.