மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Photo of author

By Savitha

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Savitha

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.

சிறுமி பள்ளிக்குச் செல்ல பேருந்தில் பயணிக்கும்போது பாலியல் தொல்லை அளிப்பது, தலை முடியை பிடித்து இழுப்பது என தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வர்க்கலா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழு வழக்கு பதிவு செய்து கிருஷ்ணராஜை தேடி வந்தனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் வலை வீசி தேடிப் பிடித்து தற்போது கைது செய்துள்ளனர்.