திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

Photo of author

By Parthipan K

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

Parthipan K

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள்.

மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் ஈடுபட்டார்கள். அப்போது தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சதீஷ் ராஜனை கத்தியால் குத்தினார்கள். அக்கம் பக்கத்தினர் சதீஷ் ராஜனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்  பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுஷ் என்பவரை கைது செய்தார்கள். தனுஷ் என்பவரின்  நண்பர்கள் இருவரும் தப்பி சென்றதால் போலீசார்  அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.