மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!
தலைநகரான டெல்லியில் 12 வயது சிறுமியை கத்திரிக்கோலால் சிதைத்து பல காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மனதை உருகுலைய செய்திருக்கிறது.
டெல்லியின் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் வியாழக்கிழமை வீட்டில் இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனை தடுத்ததால் கத்தரிக்கோலால் அந்தப் பெண்ணை குத்தி வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளான்.
இச்சம்பவம் குறித்து பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் சிறுமியின் வீட்டின் அருகே அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து வந்திருக்கின்றனர்.
இதனை அடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
போலீசார் விசாரணையில், குற்றவாளி குடி போதைக்கு அடிமையானவன் எனவும், பல குற்றங்களில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி இவன் எனவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
அவன் திருடும் நோக்கத்துடன் தான் வீட்டின் உள்ளே நுழைந்ததாகவும், அப்பொழுது குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
சிறுமி கூச்சலிடுடவே அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து சிறுமியை பயங்கரமாக தாக்கியுள்ளான்.
இதனால் சிறுமியின் மர்ம பாகங்கள் மற்றும் குடல் பகுதிகள் பலத்த காயத்துடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
12 வயதே நிரம்பிய சிறுமி அருகில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்.
மிகவும் மோசமான நிலையில் இந்தியா தள்ளப்பட்டு உள்ளது. என்னதான் பொருளாதாரத்திலும் மற்றவருக்கு உதவுவதாலும் இந்தியா முன்னேற்றம் கண்டிருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் இன்னும் இந்தியாவை கீழ் நோக்கியே இழுத்துச் செல்கின்றன.