கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

Photo of author

By Sakthi

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

Sakthi

Updated on:

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் இரண்டு அரசு உழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 44 வயதான முகிலன் என்பவரும் 45 வயதான பாரதி என்பவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.

 

இதையடுத்து இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று அதாவது ஜூன் 6ம் தேதி சென்றனர்.

 

இருவரும் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகில்  சென்று கொண்டிருந்த பொழுது முகிலன், பாரதி இருவரும் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முகிலன், பாரதி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். கீழே விழந்ததில் பலத்த காயம் அடைந்த முகிலன் மற்றும் பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

சம்பவத்தை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த காவல் துறையினர் முகிலன், பாரதியின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.