இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்
அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
படகுகள் மற்றும் வண்டிகள் செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர் உதவியை கோரியுள்ளார்கள் அதிகாரிகள் .
வைகுண்டம் ஆழிகுடி என்ற தாமிரபரணியின் கரையோர கிராமம் இது! இதில் கிட்டத்தட்ட 200 குடியிருப்புகள் உள்ளன. மழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் அந்த கிராமத்தை சூழ்ந்துள்ளதால் 800க்கு மேற்பட்ட மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
மீட்பு பணிக்கு வண்டிகள் செல்ல முடியாத நிலையில் சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் வந்தால் தான் மீட்பு பணிக்குச் செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.