உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் பானங்களில் முதல் இடத்தில் இருப்பது பால் தான்.கால்சியம்,புரதம்,வைட்டமின் பி,இரும்பு என்று பல வகை ஊட்டச்சத்துக்கள் பாலில் இருக்கின்றது.
நாட்டுமாட்டு பால்,எருமைப் பால்,ஆட்டுப்பால்,ஒட்டகப் பால்,கழுதைப் பால் என்று பல வகை பால்கள் மனிதர்களால் பருகப்படுகிறது.சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு பால் சிறந்த புரதச்சத்து நிறைந்த பானமாக திகழ்கிறது.பால் குடித்தால் உடல் பருமன் ஏற்படும்.இதய நோய்கள் வரும் என்று ஆயிரம் கட்டுக் கதைகள் நம்மை சுற்றி கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் பால் ஒரு ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருளாகும்.இதய நோய்,உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பயன்படுத்தலாம்.
மேலும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் அருந்தும் பழக்கத்தை கடைபிடிக்க கூடாது.இது வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.பாலை பக்குவமாக காய்ச்சி பருக வேண்டும்.சிலர் பாலை காய்ச்சினால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும் என்று எண்ணி பச்சை பாலை குடிக்கிறார்கள்.ஆனால் பச்சை பாலில் பாக்டீரியா தொற்றுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக பாலில் சர்க்கரை,தேன் போன்ற இனிப்புகள் சேர்த்து எடுத்துக் கொள்வது தான் வழக்கம்.ஆனால் சிலர் பாலில் உப்பு கலந்து குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.இது நல்ல பழக்கம் என்று அனைவரும் நினைக்கின்றனர்.ஆனால் இது உடலில் எதிர்வினையை ஏற்படுத்திவிடும்.பாலும் உப்பும் எதிர்வினை பொருளாகும்.
பாலில் உப்பு சேர்த்து பருகினால் இரத்த அழுத்தம்,இதய நோய் போன்ற பாதிப்புகள் அதிகரித்துவிடும்.எனவே பாலில் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.இதற்கு பதில் மஞ்சள்,மிளகு அல்லது பூண்டு சேர்த்து பருகலாம்.அதேபோல் பாலில் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.