உங்களில் பலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கும்.அதிலும் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிப்பதை பலரும் விரும்புகின்றனர்.தினமும் தலைக்கு குளித்தால் முடி எண்ணெய் பசை இன்றி பளபளப்பாக இருக்கும் என்பது பலரின் எண்ணம்.தலைக்கு குளிப்பதினால் தலையில் இருக்கின்ற அழுக்கு நீங்கும் என்பது உண்மை என்றாலும் அடிக்கடி தலைக்கு குளிப்பது தங்களது முடியின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
தினமும் தலைக்கு குளிப்பதால் என்ன நிகழும்?
நீங்கள் தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் உங்கள் முடியின் அடர்த்தி குறைந்துவிடும்.தொடர்ந்து ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால் தலை முடியின் இயற்கை நிறம் மாறுகிறது.
தொடர்ந்து தலைக்கு குளிப்பதால் முடி தன் ஆரோக்கியத்தை இழந்துவிடும்.முடி வறட்சி,முடி வெடிப்பு,தலை அரிப்பு,பொடுகு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.தினமும் தலைக்கு குளிப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும்.
அது மட்டுமின்றி ஆஸ்துமா,சைனஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி தலைக்கு குளித்து வந்தால் தும்மல்,இருமல்,தலைவலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.தலைக்கு குளிப்பதால் முடி வெடிப்பு ஏற்பட்டு அதிகளவு முடி உதிர்தல் உண்டாகும்.
எனவே வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிப்பது,இதர நாட்களில் தலைக்கு வைப்பதை பின்பற்றி வந்தால் தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும்.முடி உதிர்தல் ,முடி வெடிப்பு,முடி வறட்சி,செம்பட்டை முடி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.