தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

0
205
#image_title

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம்.

குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து வரும் இந்த புயல் மழையால் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் மளமளவென்று உயர்ந்து வருகிறது. முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தோடி வருகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த கனமழை இன்னும் சில தினங்களுக்கு நீட்டிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளுர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Next articleமக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!