அதிக உப்புச்சத்து சிறுநீரக தொற்று உடல் சூடு பித்தம் நீங்க அற்புதமான வைத்தியம்!!

Photo of author

By CineDesk

அதிக உப்புச்சத்து சிறுநீரக தொற்று உடல் சூடு பித்தம் நீங்க அற்புதமான வைத்தியம்!!

உடலில் உள்ள உப்புச்சத்தை குறைக்கும் அற்புதமான பானத்தை பற்றி பார்க்கலாம். நாம் உட்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளும் உடல் உழைப்பின்மையும் உடலில் நச்சுக்கள் கழிவுகள் கொலஸ்ட்ரால் உப்பு சத்து போன்றவற்றை அதிகரிக்க செய்கிறது.

இவை இதய நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக நோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுகிறது. உடலில் உப்பு சத்து அதிகரிக்கும் பொழுது சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கிறது. இதனால் உடலில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள அதிக உப்புச்சத்தை குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சிறந்த பானத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.

பொதுவாகவே உப்புச்சத்தை குறைக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய காய் சுரைக்காய். இது உடலில் உள்ள அதிக உப்புச்சத்தை குறைப்பதால் தான் சுரைக்காய்க்கு ஒப்பில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி உடலில் உள்ள கெட்ட நீர் கழிவுகள் நச்சுக்களையும் சுரைக்காய் வெளியேற்றும் தன்மை கொண்டது.

சுரைக்காயில் விட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்கள் நாட்சத்தை நீர்ச்சத்து ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் உடலில் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. ஆனால் ஒரு சில சுரைக்காயானது கசப்பு சுவையைக் கொண்டிருக்கும் அதில் விஷத்தன்மை உள்ளதால் தவிர்த்து விட வேண்டும்.

செய்முறை:
இப்போது சுரைக்காயில் பிஞ்சு சுரைக்காயாக எடுத்து அதில் ஒரு கூற்றளவு எடுத்து நறுக்கி அதனுடன் சிறுநெருஞ்சில் செடியில் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அருந்தி வரும் பொழுது உடலில் உள்ள அதிக உப்புச்சத்து குறைய தொடங்கும்.

இந்த பானத்தில் சேர்த்திருக்கும் சிறு நெருஞ்சில் மூலிகையும் உடலில் உள்ள அதிக உப்புச்சத்து யூரிக் அமிலம் பித்தம் உடச்சூடு போன்றவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக நோய்களை குறைக்கக்கூடியது. அதனால் இந்த பானம் உப்பு சத்து உள்ளவர்களுக்கு சிறந்த பலனைத் தரும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

அதிக கிரியேட்டின் மற்றும் அதிக யூரிக் அமிலத்தை குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். உடல் பருமன் குறைய உதவும். சிறுநீரகக் கற்களை கரைக்கச் செய்யும். சிறுநீர் தொற்று சிறுநீர் கடுப்பு இருக்கும் பொழுது இதுபோன்று தயார் செய்து அருந்தி வந்தால் குணமாகும்.

மேலும் உடலில் உள்ள அதிக பித்தம் உடச்சூடு போன்றவை நீங்கும் கல்லீரல் கருப்பை ஆரோக்கியம் அதிகரிக்கும். செரிமான சக்தியை மேம்படுத்தும். இவ்வாறு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் சிறந்த பானம் இது.

எப்பொழுதெல்லாம் உடலில் உப்பு சத்து அதிகரிக்கிறதோ அந்த சமயத்தில் இந்த ஜூசை தயார் செய்து அருந்தி வரலாம். இந்த சுரைக்காய் நெருஞ்சில் சாற்றை எடுத்துக் கொள்ளும் பொழுது நொறுக்கு தீனிகள் என்னை பதார்த்தங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது அவசியம்.