திருமணம் ஆன சில நாட்களிலேயே தொல்லை கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…!

0
88

திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக உள்ளது. ஒரு சிலருக்கு நல்ல முறையில் வாழ்க்கையை மாற்றும் ஆனால், கர்நாடகாவில் திருமணம் செய்தபின் மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் மகேஸ்வரா (24) இவருக்கு கவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களில் அவர்களுக்குள் பிரச்சனை வந்துள்ளது. தினமும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. கவனா தனது கணவரின் குடும்பத்தையும் கணவரையும் தவறாக பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, மகேஸ்வராவின் தாயார் ரத்னம்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், தனது மகனுடன் மருமகள் தினம் சண்டையிட்டு வந்ததாகவும் தனது மகன் சாவுக்கு அவர்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சல் ஏற்பட்டால் மனம் வீட்டு பேசுங்கள் அல்லது 104 என்ற எண்ணிற்கு அழைத்து மனம் விட்டு பேசலாம்.