ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் வாங்கி அவருடைய பெற்றோர் தகனம் செய்தனர்.இந்நிலையில் மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கானது என்னுடைய மகளின் மரணத்திற்கு நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பது தான்.
அந்த வழக்கானது நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அந்த விசாரணையில் காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில் நான்கு முறை சம்மன் அனுப்பியும்.மாணவி பயன்படுத்திய கைப்பேசி விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது .இரண்டு மாதங்களில் காவல்துறையினர் விசாரணை முடிந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஸ்ரீமதி தந்தை தரப்பில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனவும் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை ஆகியவை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் எனது மகளிடம் கைப்பேசி இல்லை அவர் விடுதி வார்ட்டனின் கைப்பேசியில் தான் எங்களிடம் பேசுவார் என தெரிவித்தார்.அப்போது நீதிபதி கைப்பேசி ஒப்படைபதில் என்ன பிரச்சனை உள்ளது ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் மாணவி பயன்படுத்திய கைப்பேசி இருக்கின்றதா இல்லையா என கேட்டனர்.அதற்கான பிராணாப் பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவி தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.ஆதாரம் வைத்துக்கொண்டு அதனை மறைக்க நினைத்தால் அது சட்டப்படி குற்றம் என தெரிவித்தனர்.அதற்கான உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மாணவி கைப்பேசி பயன்படுத்தியிருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.