பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இனி நீங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்!

0
379
#image_title

பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இனி நீங்களே ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்!

இந்திய குடிமகன்கள் ஒவ்வொருக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்று. ஆதார் அடிப்படையில் தான் மத்திய மற்றும் மாநில அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. ஆதார் அட்டையில் ஆதார் எண், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கியமாக திகழ்ந்து வரும் நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாக ஆதார் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்று குறித்து விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வாங்க அவர்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை தேவைப்படும்.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டெப் 01:

ஆன்லைனில் UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ‘Get Aadhaar’ என்பதை கிளிக் செய்யவும். அதன் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கும் ‘Book an Appointment’ என்பதை கிளிக் செய்யவும். தொடர்ந்து location தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 03:

அதன் பின்னர் New Aadhar என்பதை கிளிக் செய்யவும். பிறகு உபயோகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை பதிவிடவும். மேலும் கேட்கப்படும் விவரங்களை கொடுத்து Proceed மற்றும் Submit என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 04:

பிறகு தாங்கள் தேர்வு செய்த ஆதார் முகாமிற்கு சென்று தங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை பதிவு கொள்ளவும்.

Previous articleதினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த உணவை எல்லாம் டீயுடன் சாப்பிடக்கூடாது!
Next articleஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!