தினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த உணவை எல்லாம் டீயுடன் சாப்பிடக்கூடாது!

0
179
#image_title

தினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அப்போ இந்த உணவை எல்லாம் டீயுடன் சாப்பிடக்கூடாது!

தினமும் காலை மற்றும் மாலை என. இரு வேளைகளிலும் அல்லது இடைப்பட்ட நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அனைவரும் டீ குடிக்கும் பொழுது டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் பெட் காபி பெட் டீ குடிக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதிலும் காபியை விட காலையில் எழுந்து டீ குடித்தால் தான் அந்த நாளை தொடங்குபவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் டீ குடித்தால் புத்துணர்ச்சி வரும் என்பது தெரிந்தது.

அதே போல காலை மற்றும் மாலை நேரத்தில் டீ குடிக்கும் பொழுது நாம் டீயுடன் சேர்த்து பிஸ்கட், ரஸ்க், வடை போன்ற சில உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் வைத்துள்ளோம். அந்த வகையில் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத மற்றும் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்…

* டீ குடிக்கும் பொழுது அதிகம் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடக்கூடாது. மேலும் பறித்து எடுக்கப்பட்ட உணவு வகைகளாக இருக்கும் வடை, பஜ்ஜி போன்ற உணவுகளையும் சாப்பிடக்கூடாது. அவ்வாறு டீயுடன் சேர்த்து பொறித்தெடுக்கப்பட்ட அல்லது மசாலா அதிகம் உள்ள உணவுப் பண்டங்களை சாப்பிடும் பொழுது அசிடிட்டி பிரச்சனை உருவாகும்.

* டீ குடிக்கும் பொழுது அதிகம் இனிப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. கேக், லட்டு, ஜிலேபி போன்ற அதிகம் இனிப்பு கொண்ட பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடுவது மிகுந்த ஆபத்தான ஒன்று. இவ்வாறு டீயுடன் இனிப்பு அதிகமாக உள்ள புழுக்கள் சாப்பிட்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து விடும்.

* டீ குடிக்கும் பொழுது சிப்ஸ், உப்பு நிறைந்த கடலை போன்ற உணவுகளையும் நாம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் டீயுடன் இவற்றை நாம் சாப்பிடும் பொழுது உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகும். மேலும் இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் வீக்கம் போன்ற பிரச்சனையை இது ஏற்படுத்தும்.

* டீ குடிக்கும் பொழுது ஆரஞ்சு, திராட்சை போன்ற கிட்ஸ் அமிலம் அதிகம் உள்ள பழ வகைகளை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் டீயுடன் கிட்ஸ் அமிலம் அதிகமுள்ள பழங்களை சாப்பிடும் பொழுது வயிறு தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தும்.

* டீ குடிக்கும் பொழுது நாம் சிவப்பு நிற இறைச்சி உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதுவும் வயிற்றில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* நாம் டீ குடிக்கும் பொழுது பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட வேண்டும். தவிர்த்து விட்டால் நம்முடைய வயிறுக்கு ரெம்ப நல்லது.
*