மின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!
மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அவ்வாறு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்று வரைமுறைப்படுத்தியுள்ளனர்.
இலவச மானியம் மின்சார முறையை ஒழுங்குமுறை படுத்தவே ஆதார் இணைப்பு வந்ததாக தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்கட்டணம் செலுத்த முடியும்.
இல்லையென்றால் செலுத்த முடியாது என்ற கூறி வந்தனர். ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுத்துள்ளோம்.
உடனடியாக இணைக்க வேண்டும் எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லை. இவ்வாறு வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.
ஆனால் பல இடங்களில் ஆன்லைனில் மின்கட்டணம் கட்ட முன் வந்தால் ஆதார் இணைப்பு தற்போதையிலிருந்து கேட்கிறது. இது குறித்தும் பல மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனால் மக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு சார்பிலேயே சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமானது நாளை தொடங்குகிறது. இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிகிறது.
அனைத்து மண்டலங்களில் உள்ள அலுவலகங்களிலும் காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு அவரவர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கிடைத்த பிறகு மின்கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் வராது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மானியம் மின்சாரமும் எந்த ஒரு தடையின்றி வழங்கப்படும் என்று கூறினார்.