உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

Photo of author

By Vinoth

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று உறுதியாக சொல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் பிறகு 15 ஆண்டுகளாக இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த முறைய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்திய அணி பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. குறிப்பாக பூம்ரா இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ள ஷமி சிறந்த பந்துவீச்சாளர் என்றாலும், அவர் கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் அவரின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இந்திய அணி சில பிரச்சனைகளை சரிசெய்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் “அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நான் நினைக்கிறேன். அதுபோல இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றுதான் அரையிறுதிக்கு முன்னேறும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.