“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

0
68

“பாகிஸ்தானின் தொடக்க ஜோடியை காலிபண்ண இதை செய்யுங்கள்…” இர்பான் பதான் அறிவுரை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களும் உற்சாகமாகி விடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் மோதும் போட்டிகள் உலகளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளன. சமீபத்தில் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அடுத்து வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன.

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது சம்மந்தமாக இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் பேசியுள்ளார். அதில் “பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பந்தை ஸ்டம்புக்கு வெளியே வீசக்கூடாது. ஸ்டம்ப்பை நோக்கியும், அவர்களின் உடலிலும் வீசவேண்டும். அப்போது அவர்கள் தடுமாறுவார்கள். எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடிகளான பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் இப்போது சிறப்பான ஆட்டத்திறனில் இல்லை.