ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Divya

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 20 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஆவின்(திருநெல்வேலி)

பணி:

*கால்நடை ஆலோசகர்

பணியிடங்கள்: 04

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.V.Sc.,& AH படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 20-03-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.