அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!..
ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் மாநகராட்சியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பல மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு ஒன்று செயல்பட்டும் வருகின்றது.ஸ்மார்ட் வகுப்பில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஏசி இயந்திரத்தை ஊழியர்கள் ஆன் பட்டனை போட்டுள்ளனர்.நன்றாக செயல் பட்டு கொண்டிருந்த ஏசி திடிரென்று டமால் என அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.ஏசி வெடித்ததால் அதிலிருந்து வரும் நெருப்பு கசிந்து அந்த அறை முழுவதும் பரவ தொடங்கியது.இதனால் அறையில் வைக்கப்பட்டிருந்த கணினி ,தொழில்நுட்ப சாதனங்கள் உட்பட அனைத்து பொருட்களும் தீயினால் எரிந்து நாசமாகின.
நல்ல நேரமாக அப்போதுதென்று அந்த அறையில் எவரும் இல்லை.இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.மேலும் அருகில் இருக்கும் வகுப்புக்கும் தீ பரவும் என எண்ணி மாணவர்களை அடுத்த அறைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி வகுப்பில் ஏசி வெடித்து தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.