ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!
வெயில் காலத்தில் மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை.
மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் ஒரு இயந்திரம் இது காற்றை மட்டும் நமக்கு தருகிறது. இது அறையில் இருக்கும் வெப்பத்தை மாற்றுவதில்லை. இது ரூமில் இருக்கும் டெம்பரேச்சர் குறைப்பதில்லை.
ஏசி எப்படி வேலை செய்கிறது என்றால் பிரிட்ஜ் போன்று refrigerator cycle இருக்கிறது. ஏசி அறையில் இருக்கும் முழு வெப்பத்தையும் குறைக்கிறது. மேலும் ரூமில் இருக்கும் டெம்பரேச்சரை குறைத்து குளிர்ந்த காற்றை கொடுக்கிறது. ஏசியில் ஈரப்பதத்தை குறைக்கிறது குளிர்ச்சியான காற்று கிடைக்கிறது.
ஏர் கூலர் இது ஓரளவு ரூமில் இருக்கும் வெப்பநிலையை குறைக்கிறது. தேவையான காற்று கிடைக்கிறது.
எந்த இடத்தில எது சரியாக இருக்கும்
மிதமான வெப்பநிலை இருக்கும் இடத்தில் பேன் போதுமான ஒன்றாகும். இதில் முக்கியமான ஒன்று பேனை ஆன் செய்யும் போது ஜன்னல் திறந்து இருக்க வேண்டும்.
வெயில் அதிகம் வறட்சியான இடங்களில் இருப்பவர் ஏர் கூலரை பயன்படுத்தலாம். வேலூர் திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருப்பவர் ஏர்கூலர்களை பயன்படுத்தலாம்.
சென்னை ராமநாதபுரம் பாண்டிச்சேரி போன்ற கடலோரம் இருக்கும் மாவட்டங்களுக்கு ஏசி ஏதுவாக இருக்கும்.
வெப்பம் குறைவாக உள்ள ஊரில் ஏசி பயன்படுத்தினால் செய்ய வேண்டியவைகள்
1. அறையில் பாத்திரங்கள் தண்ணீர்கள் வைக்க வேண்டும்.
2. ஈரப்பதம் நிறைந்த துணிகளை அறையில் வைக்கலாம்
3. அறையில் செடிகள் வைக்கலாம்
இதுபோன்று பயன்படுத்தினால் மட்டும் பிரச்சினைகள் வராமல் இருக்கும்.
சென்னை போன்ற ஊர்களுக்கு ஏசி ஒரு பெஸ்ட்டாக அமைகிறது.
கடலோரப் பகுதியிலுள்ள ஊர்களில் ஏர் கூலர்கள் பயன்படுத்துவர்கள் செய்ய வேண்டியவை.
ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும் இதனால் ஈரப்பதத்தை குறைக்க முடியும். கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் ஏர் கூலர்களை ஜன்னல்களை சாத்திவிட்டு பயன்படுத்தக் கூடாது.
ஏசி பயன்படுத்துவர்களுக்கு வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த வேண்டும். இதுவே சாதாரணமான செல்சியஸ் ஆகும்.