பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

0
145
#image_title

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac).

காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது.

இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கையை அழிவின் விளிம்பிற்கு கொண்டு போய் நிற்க வைத்தது.

1980 யில் நாலு கோடியாக இருந்த இந்த இனம் தற்போது 19000 ஆக குறைந்துள்ளது.

இந்த கழுகுகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை மனிதர்களின் வயிற்றில் உள்ள அமில தன்மையை விட பத்து மடங்கு அதிகமாக காணப்படும்.

அதனாலேயே இந்த கழுகு பிணம் மற்றும் எலும்புகளை சாப்பிட்டாலும் உடனடியாக செறித்து விடும்.

இவ்வளவு குணங்கள் நிறைந்த இந்த கழுகையே இந்த டைக்ளோபினக் மருந்து அழிவுக்கு கொண்டு வர காரணமாயிற்று.

1980 ஆம் ஆண்டுகளில் இந்த மருந்தை கால்நடைகளுக்கு காயத்திற்கு மருந்தாகவும், காய்ச்சல் மற்றும் வலிக்கு மருந்தாகவும் கொடுத்து வந்தனர்.

இவ்வாறு இந்த மருந்தை எடுத்துக் கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு அதன் பிணத்தை உண்டு வந்த கழுகுகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்தில் உள்ள சோடியம் கழுகுகளின் கிட்னியில் படிந்து இரண்டு நாட்களில் இறந்து விடுகிறது.

இது தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தியா, நேபாலில் 2006 ஆம் ஆண்டு மற்றும் பங்களாதேஷில் 2010 ஆம் ஆண்டு கால்நடைகளுக்கு இந்த மருந்தை கொடுக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த மருந்து கழுகுகளின் இறப்பிற்கு காரணமாக அமைந்ததால் இதற்கு பதிலாக melaxicam என்ற புதிய மருந்தை கண்டுபிடித்தனர்.

இந்த Diclofenac மருந்து மனிதர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் இந்த மருந்தின் பாதிப்பு உணவுச் சங்கிலி மூலமாக மனிதர்களை தாக்கி 50,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

இதற்காக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் Red Data Book என்பதில் எல்லா உயிரினங்களுடைய தகவல்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள்.

இந்தியாவில் உள்ள 9 கழுகு இனங்களில் முக்கியமான 4 கழுகு இனங்கள் அழிந்து வருவதை இதன் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இதைக் காப்பாற்ற ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை அன்று விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து Action plan 2020 – 2025 என்பதை தொடங்கியுள்ளனர்.

இதற்கான நோக்கம் கழுகுகள் இறந்து போவதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதை தடுப்பது, 2006 இல் தடை செய்யப்பட்டாலும் மனிதர்கள் இதை உபயோகப்பதில் இருந்து குறைப்பது, கழுகுகளின் பாதுகாப்பு மற்றும் மீட்புமயங்களை பராமரிப்பது, இதன் இனப்பெருக்க இடங்களை பராமரிப்பது, இதனின் இறப்புகளை கட்டுப்படுத்துவது, இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மேலும் இந்த ஆக்ஷன் பிளானை முறையாக செயல்படுத்தி கண்காணிப்பது.

author avatar
CineDesk