மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர்.
இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
இது ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணிய கிராம மக்கள் இதை சரி செய்து தரும்படி பலமுறை மின்வாரிய அலுவலகர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இவர்கள் கோரிக்கையை மின்வாரிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனிடையே, காசி-யின் மகள் கீர்த்தனா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழே தொங்கியபடி இருந்த அந்த மின் கம்பி சிறுமியின் மீது அருந்து விழுந்தது. இதனால் காயம் அடைந்த சிறுமியை பெற்றோர்களும், உறவினர்களும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மோசமான நிலையைக் கண்டு அனைவரும் கதறி அழுதனர். இதற்கு மின்வாரிய அதிகாரிகள் தங்கள் கோரிக்கையை எற்றுக் கொள்ளாததுதான் காரணம் என்று மக்கள் கூறி வருகின்றனர்.
எனவே இவ்வாறு அலட்சியமாக இருக்கும் மின்வாரிய அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதுபோல சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.