லெபனான் நாட்டில் கோர விபத்து

Photo of author

By Parthipan K

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட காரணமாக நெருப்பும் புகையுமாக வெளியேறியது. உடனே ஒரு வித வண்ணமாக காட்சியளித்தது இந்த விபத்தானது அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் அதை சுற்றியுள்ள தீவுகளிலும் தாக்கம் உணரப்பட்டது. தற்போதிய சூழ்நிலையில் 73 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான  அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

லெபானான் பிரதமர் இந்த விபத்து பற்றி பேசும்போது எவ்வித  மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்  6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சினையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்றார்.