தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Photo of author

By Parthipan K

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

Parthipan K

Accidents continue to happen! Citizens argue with police to close Calquary!

தொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!

செங்கல்பட்டு மாவட்டம் ஜாமின் எண்டத்தூர் கிராமத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக கல்குவாரி இயங்கி வருகின்றது.அங்கு வந்து செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கீறல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்குவாரிக்கு செல்லும் லாரி மோதி விபத்து ஏற்பட்டத்து.அப்போது படும்காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.மேலும் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இந்த போராட்டம் குறித்து சித்தாமூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்ரிடம் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இங்கு அதிகளவில் விபத்து ஏற்படுகின்றது.அது தொடர்பாக சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

அதனால் அவர்கள் நேரில் வந்து கல்குவாரி மூடப்படும் என வாக்குறுதி அளித்த பின்னரே உடலை எடுக்க விடுவோம் என கூறினார்கள்,இதனையடுத்து அங்கு வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் சமந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதன் பிறகு உடலை எடுத்து செல்ல பொது மக்கள் அனுமதித்தனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி காணப்பட்டது.