சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

Photo of author

By Divya

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

1)நீங்கள் வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாள் பார்த்து கொடுக்கக் கூடாது. கடனை கொடுக்க உகந்த நாள் செவ்வாய். இந்த நாளில் கடனைக் கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.

2)வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது.

3)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. அதேபோல் பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது.

4)கர்ப்பிணி பெண்கள் குளவி கூடு, தேன் கூடு போன்ற எதையும் கலைக்கக் கூடாது. கர்ப்பிணி பெண்ணின் கணவரும் இதை செய்யக் கூடாது.

5)ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது.

6)சிறு குழந்தைகள் உள்ள வீட்டிற்குள் இரவு 8 மணிக்கு மேல் கால் கழுவாமல் போகக் கூடாது.

7)வெள்ளிக்கிழமை, அமாவாசை நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

8)மயானத்திற்கு சென்று வந்த பிறகு வெளியே கால் கை கழுவாமல் உள்ளே குளிக்க செல்லக் கூடாது.

9)மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவர் கடலில் நீராடக் கூடாது. கர்ப்பிணி பெண்ணின் கணவர் தலை முடி வெட்டக் கூடாது. ட்ரிம் செய்ய கூடாது. மொட்டை அடிக்க கூடாது.

10)இறந்தவர்களின் படங்களை தெற்கு திசையைத் தவிர வேறு திசை பார்த்தவாறு வைக்க கூடாது.